1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 28 நவம்பர் 2019 (15:51 IST)

பதவியேற்கும் முன்னரே ‘வருங்கால முதல்வர்’ கோஷம்: சிவசேனா அதிர்ச்சி

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்றுவந்த அரசியல் குழப்பங்களுக்கு ஒருவழியாக முடிவு ஏற்பட்டு இன்று அம் மாநிலத்தின் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்க உள்ளார். அவருடன் துணை முதல்வராக அஜித் பவார் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் இன்று மாலை சிவசேனா அரசு பதவி ஏற்கவுள்ள நிலையில் அஜீத் பவார் ஆதரவாளர்கள் மும்பையில் உள்ள முக்கிய சாலைகளில் ஒரு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
 
அஜித் பவார் அவர்கள் என்ன செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும் என்றும், அவர்தான் மராட்டியத்தின் வருங்கால முதல்வர் என்றும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று முதல்வராக பதவியேற்கவுள்ள நிலையில் அஜீத் பவார் வருங்கால முதல்வர் என குறிப்பிட்டு அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பதவி ஏற்புக்கு முன்னரே கூட்டணியில் குழப்பம் விளைவிக்கும் வகையில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த போஸ்டரை ஒட்டியது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது
 
இந்த ஆட்சி 6 மாதங்களுக்கு மேல் நீடிக்காது என ஏற்கனவே பாஜக கூறி வரும் நிலையில், பதவி ஏற்கும் முன்னரே கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய இந்த போஸ்டருக்கு காரணமானவர்கள் யார்? அவர்களுடைய பின்னணியில் இருப்பது யார்? என்பதே தற்போது அனைவரின் கேள்வியாக உள்ளது