இத்தாலியில் இருந்து தொற்றைக் கொண்டு வந்த விமானம்! – 125 பேருக்கு கொரோனா!
இந்தியாவில் ஏற்கனவே கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில் இத்தாலியில் இருந்து வந்த விமானத்தில் முக்கால்வாசி பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவலால் மீண்டும் கொரோனா பாதிப்பு தலைதூக்கியுள்ளது. இதனால் உலக நாடுகளுக்கிடையேயான விமான போக்குவரத்துகளும் கடும் கட்டுப்பாடுகளுடனே நடந்து வருகின்றன.
இந்நிலையில் இத்தாலியில் இருந்து பஞ்சாபின் அமித்சரஸ் வந்த விமானம் ஒன்றில் 179 பேர் பயணித்துள்ளனர். அவர்களுக்கு அமித்சரஸ் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது அதில் 125 பேருக்கு கொரோனா உறுதியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது ஒமிக்ரான் தொற்றா என அரிய மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இத்தாலியில் இருந்து புறப்படும்போது அங்கேயும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில் 125 பேர் கொரோனாவுடன் பயணிக்க அனுமதிக்கப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.