1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2024 (21:39 IST)

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர்.. மேலும் சில முதலமைச்சர்கள் புறக்கணிப்பா?

மத்திய பட்ஜெட்டை கண்டிக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்களான சித்தராமையா, ரேவந்த் ரெட்டி, சுக்விந்தர் சுகு ஆகியோரும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி மேலும் சில முதலமைச்சர்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்த நிலையில் அதில் தமிழகத்திற்கு தேவையான எந்த திட்டத்திற்கும் நிதி ஒதுக்காததை அடுத்து தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
 
பாஜகவின் கூட்டணி கட்சியான பாமக உள்பட திமுக, அதிமுக என பல கட்சிகள் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அதிரடியாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த ஒரு நன்மையும் இல்லை என்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதல்வர் அறிவித்ததை எடுத்து எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் பல மாநிலங்களில் இதே போன்ற அறிவிப்பு வெளியாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து நிதி ஆயோக் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா? அல்லது ரத்து செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva