செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 10 அக்டோபர் 2024 (16:26 IST)

பாஜக எம்.எல்.ஏ கன்னத்தில் அறைந்த வழக்கறிஞர்.. வேடிக்கை பார்த்த போலீசார்..!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் தேர்தல் 11ம் தேதி நடைபெற இருக்கின்ற நிலையில், அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆளும் பாஜக எம்எல்ஏ யோகேஷ் வர்மா மற்றும் உள்ளூர் வழக்கறிஞர் ஆகிய இருவருக்கும் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாகவும், இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பும் அழைப்பு விடுக்கப்பட்ட போது, யோகேஷ் சார்மா எம்எல்ஏ தனது ஆதரவாளர்களுடன் வந்தார்.

அப்போது எதிரே வழக்கறிஞர் வந்த நிலையில், திடீரென இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டனர். இந்நிலையில் திடீரென பாஜக எம்எல்ஏ கன்னத்தில் வழக்கறிஞர் அறைந்தார். போலீசார் முன்னிலையில் இந்த தாக்குதல் நடந்த நிலையில், சில போலீசார் மட்டுமே விலக்கிவிட்ட நிலையில், பல போலீசார் இதை வேடிக்கை பார்த்ததாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva