வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 21 மார்ச் 2024 (19:10 IST)

ஆன்லைன் கேமிங் மற்றும் சூதாட்ட தளங்களுக்கு விளம்பரம்- மத்திய அரசு எச்சரிக்கை

online
சோசியல் மீடியா இன்புளூயன்சியர்களுக்கு மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
மத்தியில் பிரதமர் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.இந்த நிலையில், சமீபகாலமாக  ஆன்லைன் சூதாட்டம் போன்றவற்றால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்வதை மீடியாக்களில் செய்தியாள வெளியானது.
 
இந்த ஆன்லைன் கேமிங் மற்றும் சூதாட்டை தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், சோசியல் மீடியா இன்புளூயன்சியர்களுக்கு மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
அதில், வெளி நாடுகளில் இருந்து செயல்படும் ஆன்லைன் கேமிங் மற்றும் சூதாட்ட தளங்களுக்கு விளம்பரம் செய்வதையும், புரமோட் செய்வதையும் தவிர்க்கும்படி கூறியுள்ளது.
 
மேலும், ஆன்லைன் சூதாட்டங்கள், சமூகம் மற்றும் பொருளாதார அடிப்படையில் எதிர்மறை தாக்கங்களை கொண்டுள்ளதாக மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.