திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (08:07 IST)

கங்குலிக்கு கண்டனம், கங்குலி மகளுக்கு பாராட்டு: ரஜினி பட நாயகியின் பரபரப்பு டுவீட்

சமீபத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலியின் மகள் சனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்து ஒரு பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் நெட்டிசன்கள் இருந்து வெளியான நிலையில், உடனே தனது மகள் சனாவுக்கு எதுவும் தெரியாது என்றும் அவள் சின்னப் பெண் என்றும் அவளை விட்டு விடுங்கள் என்றும் கூறியிருந்தார். மேலும் அவர் குடியுரிமை சட்டம் குறித்து எந்தவிதமான கருத்தையும் பதிவு செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் இதுகுறித்து ரஜினியின் பாட்ஷா உட்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை நக்மா தனது சமூக வலைதளப் பக்கத்தில், கங்குலி மகள் சனாவுக்கு வாழ்த்து கூறியதோடு  அவர் தனது கருத்தை வெளிப்படையாக தைரியமாக கூறியதற்கு அவருக்கு பாராட்டு தெரிவித்து கொள்வதாக தனது டுவிட்டரில் கூறியிருந்தார்.
 
அதே நேரத்தில் கங்குலி தனது மகளை சுதந்திரமாக தனது கருத்துக்களை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அவர் ஓட்டுப்போடும் வயது வந்துவிட்டதால் அவரை அடக்க நினைப்பது தவறு என்றும் அவர் கூறியுள்ளார். நடிகையும் காங்கிரஸ் பிரபலமுமான நக்மா கங்குலிக்கு கண்டனமும், அவரது மகளுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது