1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 5 செப்டம்பர் 2022 (13:44 IST)

பாலியல் வழக்கில் கைதான மடாதிபதிக்கு நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு!

madathipathi
பாலியல் வழக்கில் கைதான மடாதிபதிக்கு நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு!
பாலியல் வழக்கில் கைதான மடாதிபதி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் என நீதிபதி உத்தரவிட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள மடாதிபதி சிவமூர்த்தி முருகன் என்பவர் மீது இரண்டு மாணவிகள் பாலியல் புகார் கொடுத்தனர். இதனை அடுத்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
 
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாட்கள் காவலில் வைக்க போலீசார் அனுமதி கேட்ட நிலையில் நீதிபதி அதற்கு அனுமதி கொடுத்தார் 
 
இந்த நிலையில் மடாதிபதியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என்றும் மடாதிபதிக்கு உடல்நிலை சரியில்லாததால் அதனை காரணம் காட்டி ஜாமீன் வழங்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது