செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 10 ஏப்ரல் 2023 (22:16 IST)

ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அங்கீகாரம்: கம்யூனிஸ்ட் உள்பட 3 கட்சிகளுக்கு அங்கீகாரம் ரத்து,..!

Aam Admi
ஆம் ஆத்மிகட்சிக்கு தேசிய அங்கீகாரம் வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் கம்யூனிஸ்ட் உள்பட மூன்று கட்சிகளுக்கு தேசிய கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
 
ஆம் ஆத்மி கட்சி தற்போது டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது. மேலும் குஜராத் உள்பட வேறு சில மாநிலங்களிலும் போட்டியிட்டது என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் தங்கள் கட்சிக்கு தேசிய கட்சி அங்கீகாரம் வழங்க வேண்டும் என ஆம் ஆத்மி தேர்தல் ஆணையத்தில் மனு செய்திருந்த நிலையில் தற்போது அக்கட்சிக்கு தேசிய கட்சி அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய மூன்று கட்சிகள் தேசிய கட்சி என்னும் அங்கீகாரத்தை இழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வெவ்வேறு 3 மாநிலங்களில் குறைந்தபட்சம் 2 மக்களவை தொகுதிகளை கொண்டுள்ள கட்சி, 4 மாநிலங்களில் நடந்த பொதுத்தேர்தலில் குறைந்தபட்சம் 6% வாக்குகளைப் பெற்ற கட்சிகளுக்கு தேசிய கட்சி அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஎம், பகுஜன் சமாஜ், என்.பி.பி. ஆகிய கட்சிகள் தேசிய கட்சிகளாக உள்ளன
 
Edited by Siva