பர்த்டே பார்ட்டி; ஃபுல் போதை: சைடு கேப்பில் நண்பனின் தோழியை சீரழித்த வாலிபர்
பர்த்டே பார்ட்டியில் போதையில் இருந்த வாலிபர் நண்பனின் தோழியை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் எச்.ஏ.எல் பகுதியில் வசித்து வருபவன் ஆரிப். இவன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறான். இவனின் நண்பன் ஆதித்யா. இருவரும் ஒரே அபார்ட்மெண்ட்டில் வசித்து வருகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு ஆரிப்பிற்கு பேஸ்புக் மூலம் இளம்பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இருவரும் நட்பாக பழகி வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஆரிப் தனது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக தனது ஃபேஸ்புக் தோழிக்கு அழைப்பு விடுத்தார். ஆரிபின் அழைப்பை ஏற்ற அந்த பெண் அவரின் அபார்ட்மெண்ட்டிற்கு சென்றார்.
அங்கு ஆரிஃப், அவரது நண்பர் ஆதித்யா, அந்த இளம்பெண் ஆகிய மூவரும் மது அருந்தியுள்ளனர். பின்னர் அந்த பெண் தூங்க சென்றுவிட்டார். ஆரிஃப் உணவு வாங்க வெளியே சென்றுவிட்டார்.
இந்த சந்தரப்பத்தை பயன்படுத்திக்கொண்ட ஆதித்யா, போதையில் இருந்த அந்த பெண்ணை கற்பழித்துள்ளார். பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமையை அவர் ஆரிபிடம் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின்பேரில் போலீஸார் ஆதித்யாவை கைது செய்தனர். கூடா நட்பு கேடாய் விளையும் என்பார்கள். இந்த பழமொழிக்கு இந்த சம்பவம் மிகச்சரியான எடுத்துக்காட்டு....