வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 14 ஆகஸ்ட் 2019 (13:05 IST)

காஷ்மீரின் உண்மை நிலை என்ன? வைரலாகும் புகைப்படம் உண்மையா??

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போல் வெளிவந்த புகைப்படம் உண்மையா??

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் பொதுமக்கள் மகிழ்ச்சியாக உள்ளது போல் ஒரு புகைப்படம் வெளிவந்தது. அந்த புகைப்படம் வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டன.

இந்நிலையில் அந்த புகைப்படம் உண்மையா என ஆராய்ந்ததில் அது கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் என கூறப்படுகிறது. ஆனால் அந்த புகைப்படம், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு பின் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று குறிப்பிட்டு பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இது போல், காஷ்மீரில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பது போல் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படங்கள் தற்போது போலி செய்திகளோடு இணையத்தில் சுற்றி வந்துகொண்டிருக்கிறது என்றும் கூறப்படுகின்றன.