1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 21 ஏப்ரல் 2018 (11:30 IST)

8 மாத குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்

டெல்லியில் 8 மாத குழந்தையை அவரது தாயே கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அமான் விஹார் பகுதியை சேர்ந்தவர் விவேக். இவர் தனது மனைவி மற்றும் 8 மாத ஆண் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார். வெகு நேரம் தட்டியும், கதவு திறக்கப்படாததால், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு ஒரு பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அவரது மனைவி தனது 8 மாத குழந்தையின் தலையை துண்டித்து அந்த குழந்தையின் உடலை மடியில் வைத்துகொண்டு தூங்கிக்கொண்டு இருந்துள்ளார்.
 
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரித்ததில், அந்த பெண் மனநலம் பாதித்தவர் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த பெண்ணை போலீஸார் மனநல காப்பகத்தில் அனுமதித்துள்ளனர்.