டாக்டரை கற்பழிக்க முயன்ற நபர் - உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றம்
மும்பையில் முதியவர் ஒருவர் பெண் டாக்டரை கற்பழிக்க முயற்சித்த போது மாடியில் இருந்து தவறி விழுந்து பலியானார்.
மும்பையில் மலாடு பகுதியில் செரியன் எலன்(60) என்பவர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அதே குடியிருப்பில் பெண் டாக்டர் ஒருவர் வசித்து வருகிறார்.
அந்த பெண் டாக்டர் மீது சபலம் கொண்ட எலன், அந்த பெண் டாக்டரை வீடு புகுந்து கற்பழிக்க முயற்சித்துள்ளார்.
பெண் டாக்டர் கத்தி கூச்சலிடவே, பயந்துபோன எலன் அங்கிருந்து தப்பி படி ஓடினார். அப்பொழுது மாடியில் இருந்து அவர் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.