மறைவிடத்திற்கு அழைத்த காதலி: ஆசையாய் சென்ற காதலன்: கடைசியில் ’கட்’ ஆன பரிதாபம்
ஒரு தலை காதலால் பெண்ணை டார்ச்சர் செய்த வாலிபரை அந்த பெண் சரியாக பழி வாங்கிய சம்பவம் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.
மும்பை நந்திவலியைச் சேர்ந்த 47 வயது பெண் ஒருவர் தனது கணவருடன் ஒரு குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது பக்கத்து வீட்டி வசித்து வந்த துஷார் புஜாரே (27) என்ற வாலிபர் அந்த பெண்ணை ஒரு தலைபட்சமாக காதலித்து அவருக்கு டார்ச்சர் கொடுத்து வந்துள்ளான். அந்த பெண் கண்டித்தும் புஜாரே திருந்துவதாய் இல்லை.
சமீபத்தில் புஜாரே, அந்த பெண்ணின் கணவனிடம் சென்று உனது மனைவி பலருடன் தொடர்பில் உள்ளார் என கூறியுள்ளான். இதனால் அந்த பெண்ணுக்கும் அவரது கணவனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
தம்மை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய துஷார் புஜாரேவை பழி வாங்க வேண்டுமென முடிவெடுத்த அந்த பெண், தன் நண்பர்கள் மூலம் புஜாரேவே மறைவிடத்திற்கு வரவைத்தார். அங்கு வைத்து அவனது பிறப்புறுப்பை வெட்டி எறிந்தார் அந்த பெண். வலியால் அலறித்துடித்த அவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பெண்ணை பலர் பாராட்டி வருகிறார்கள்.