வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 24 செப்டம்பர் 2020 (08:37 IST)

சூரத் ஓஎன்ஜிசி ஆலையில் பயங்கர தீ விபத்து: அதிகாலையில் பயங்கரம்

சூரத் ஓஎன்ஜிசி ஆலையில் பயங்கர தீ விபத்து

குஜராத் மாநிலத்தில் உள்ள ஓஎன்ஜிசி ஆலையில் திடீரென இன்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

 
இன்று அதிகாலை 3:30 மணியளவில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் என்ற நகரில் உள்ள ஓஎன்ஜிசி எண்ணெய் ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக அந்த ஆலையில் உள்ள பாய்லர்கள் வெடித்து சிதறியதாகவும், அதன் சத்தம் பல கிலோமீட்டருக்கு கேட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதிக்கு தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றதாகவும் சற்றுமுன் வந்த தகவலின் படி தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஓஎன்ஜிசி நிறுவனம் தெரிவித்துள்ளது 
 
இந்த தீ விபத்து எதனால் நடந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதற்கான காரணம் தெரியவரும் என்றும் ஓஎன்ஜிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலையில் ஓஎன்ஜிசி ஆலையில் ஏற்பட்ட தீ காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது