ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 21 ஜூலை 2018 (13:18 IST)

சாதி மாற்றுத் திருமணம் - பெண்ணை ஆணவக் கொலை செய்த தந்தை

வேற்று சாதி பையனை காதலித்ததால், பெத்த பெண்ணை அவரது தந்தை உயிரோடு எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் கலப்புத் திருமணம் செய்வதனால் ஏற்படும் ஆவணக் கொலைகளை தடுக்க கடும் சட்டம் இயற்றப்பட்ட போதிலும் அந்த கொடுமைகள் குறைந்த பாடில்லை.
 
மத்திய பிரதேச மாநிலம்  கண்ட்வா மாவட்டம்   சைன்புர் சர்கார் கிராமத்தை  சேர்ந்த சுந்தர் லால் என்பவரின் மகள் லட்சுமி பாய் ராஜ்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள்.
 
இந்த விஷயம் லட்சுமியின் வீட்டாருக்கு தெரிய வரவே அவர்கள் கடும்  எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இதனை கேட்காத லட்சுமி வீட்டில் இருந்து வெளியேறினார். இதனையறிந்த சுந்தர், மகளிடம் சென்று என்னுடன் வா என கேட்டுள்ளார். இதற்கு லட்சுமி மறுப்பு தெரிவித்ததோடு, சுந்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
 
இதனால் கோபமடைந்த, சுந்தர் பெற்ற மகள் என்றும் பாராமல் அவர் மீது பெட்ரோல் வைத்து கொளுத்தியுள்ளார்.  உடல் முழுவதும் தீ பரவி பரிதாபமாக லட்சுமி உயிரிழந்தார். மகளை பெற்ற அப்பாவே தீ வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இச்சம்பவம் தொடர்பாக சுந்தர் லாலை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.