1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (08:28 IST)

5,500 கிலோ கலப்பட நெய் தயாரித்த கம்பேனி! மொத்தமாக சீல் வைத்த அதிகாரிகள்!

Ghee Factory Seal

திருப்பதில் லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதன் எதிரொலியாக நாடு முழுவதும் நெய் கம்பெனிகளில் நடந்து வரும் ரெய்டில் பல கலப்பட நெய் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

 

திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் வழங்கப்படும் பிரசாத லட்டில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து நாடு முழுவதும் பல முக்கிய கோவில்களின் நெய் பிரசாதங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் கலப்பட நெய் நிறுவனங்களை கண்டறித்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் நெய்யில் கலப்படம் செய்த மூன்று நிறுவனங்களை கேரள அரசு தடை செய்துள்ளது. அதுபோல தற்போது மத்திய பிரதேசத்தில் நெய் தயாரிப்பு நிறுவனங்களில் தர சோதனை நடத்தப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள வீர் சாவர்க்கர் நகரில் இயங்கி வரும் நெய் கம்பெனி ஒன்றில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
 

 

அப்போது அங்கு நெய்யில் கலப்பதற்காக சோயா எண்ணெய், பாமாயில், விலங்குகள் கொழுப்பு ஆகிய கலப்பட பொருட்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சுமார் ரூ.7 லட்சம் மதிப்புள்ள 5,500 கிலோ நெய்யை பறிமுதல் செய்து அழித்ததுடன், அந்த நெய் கம்பெனிக்கும் மொத்தமாக சீல் வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K