1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 29 நவம்பர் 2017 (13:26 IST)

உலகின் மிகப்பெரிய டைனிங் டேபிளில் இவாங்காவுக்கு டின்னர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப் மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற உலக தொழில் முனைவோர் மாநாட்டில் இவாங்கா கலந்து கொண்டு மோடியையும் இந்தியாவையும் புகழ்ந்து பேசினார்.
 
இதனையடுத்து ஐதராபாத்தில் உள்ள நிஜாம் மன்னர் பரம்பரைக்கு சொந்தமான மார்பிள் பலாக்னுமா அரண்மனையில் இவாங்காவுக்கு டின்னர் வழங்கப்பட்டது. இந்த அரண்மனையில் உள்ள டைனிங் டேபிள்தான் உலகின் மிக நீளமான டைனிங் டேபிள். இதில் ஒரே நேரத்தில் 101 பேர் உட்கார்ந்து சாப்பிடலாம்.
 
இந்த டைனிங் டேபிளில் இவாங்காவுடன் பிரதமர் மோடி மற்றும் உயரதிகாரிகள் டின்னர் சாப்பிட்டனர். டின்னரில் கோஸ்ட் ஷிகாம்புரி கபாப், குபானி கே மலாய் கொஃப்டா, முர்க்பிஸ்தா கா சலன், சிதாபல் குல்பி மற்றும் அத்திப்பழம், குங்குமப்பூ போன்ற உணவுகள் பரிமாறப்பட்டன. மேலும் புகழ்பெற்ற ஐதராபாத் பிரியாணியும் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவாங்கா தனது உரையில் ஐதராபாத் பிரியாணி குறித்து குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.