சொத்துக்காக 62 வயது தந்தையை 9 நாட்கள் கட்டி வைத்து கொடுமை படுத்திய மகன் கைது
பீகாரில் சொத்துக்காக தன்னை கஷ்டப்பட்டு வளர்த்த தந்தை என்றும் பாராமல், 9 நாட்கள் அவரை அடைத்து வைத்து துன்புறுத்திய மகனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்தவர் ராஜேஷ் பன்சால்(62). இவரது மனைவி நீலம் பன்சால். இவர்களது மகன் நிமித் பன்சால். ராஜேஷ் பன்சாலை சொத்து பத்திரத்தில் கையெழுத்திட அவரது மகன் அவ்வப்போது துன்புறுத்தி வந்துள்ளார். சமீபத்தில் கொடூரத்தின் உச்சமாய், தந்தை என்றும் பாராமல் நிமித் பன்சால், ராஜேஷ் பன்சாலை 9 நாட்கள் ரூமில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் ராஜேஷ் பன்சால் ஒரு துண்டு பேப்பரில் தான் படும் கஷ்டத்தை எழுதி ஜன்னல் வழியாக வெளியே வீசியுள்ளார். அந்த பேப்பரை பார்த்த நபர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ராஜேஷ் பன்சாலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் போலீஸார் நிமித் பன்சால் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.