செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 4 ஏப்ரல் 2024 (15:13 IST)

அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய வழக்கு; நீதிமன்றம் அதிரடி உத்தரவு

kejriwal
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே டெல்லி துணைமுதல்வர் மணீஸ் சிசோடியா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இதையடுத்து, தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதாவும் இவ்வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
 
இவ்வழக்கில் பல முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாத முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இவ்வழக்கின் விசாரணை  நடந்து வரும்  நிலையில், சிறையில் உள்ள கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் இருந்து விலகக் கூடாது என ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 
அதேசமயம், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சராக தொடர கூடாது என அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை இன்று நீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
 
இதுகுறித்து நீதிமன்றம், டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர முடியாது என நாங்கள் எப்படி சொல்ல முடியும்? இது சட்டப் பிரச்சனை அல்ல. ஒரு நடைமுறைப் பிரச்சனை. இதில்  நாங்கள் எப்படி தலையிட முடியும்? என்று கூறி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை இன்று நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.