1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 4 மே 2024 (10:12 IST)

அமித்ஷா மீது பாய்ந்தது வழக்குப்பதிவு.! தெலங்கானா போலீசார் நடவடிக்கை.! எதற்காக தெரியுமா.?

amith sha
தெலங்கானாவில் நடந்த வாகனப் பேரணியில் விதிகளை மீறி குழந்தைகளை பங்கேற் வைத்ததாக கூறி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது தெலங்கானா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், தெலங்கானா மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளுக்கும் வரும் மே 13 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தெலங்கானாவில் நடந்த வாகனப் பேரணியின்போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.

 
பாஜக சார்பில் நடைபெற்ற பேரணியின்போது விதிகளை மீறி, குழந்தைகளை பங்கெடுக்க வைத்ததாக  அந்த புகாரில் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அமித்ஷா உள்ளிட்ட 5 பேர் மீது தெலங்கானா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.