ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 24 ஏப்ரல் 2024 (12:19 IST)

தேர்தல் பத்திர விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

தேர்தல் பத்திர விவகாரத்தை, சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
தேர்தல் பத்திர திட்டம் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் பலன் அடைந்ததாக மனுவில் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதன் தரவுகளை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றியது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தேர்தல் பத்திர விவகாரத்தில்  எஸ்ஐடி அமைத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Common cause மற்றும் பொதுநல வழக்காடு மையம் ஆகிய அமைப்புகளின் சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..
 
Edited by Mahendran