திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 15 ஜூலை 2023 (19:47 IST)

தக்காளி விற்று ஒரே மாதத்தில் கோடீஸ்வரரான விவசாயி

நாடு முழுவதும் தக்காளி விலை விண்ணைமுட்டும் அளவில் உயர்ந்துள்ள  நிலையில், மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த  நாராயண்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த துகாராம் ஒரே மாதத்தில் ஒரு கோடி வருமானம் ஈட்டியுள்ளார்.

நாடு முழுவதும் தக்காளி விலை கிலோ ரூ.100 க்கு மேல் விற்பனையாகி வருகிறது. இதனால், ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த  நிலையில், மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த  நாராயண்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த துகாராம் என்பவருக்கு அங்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இதில், 12 ஏக்கரில் தக்காளி பயியிட்டுள்ளார்.

இவருடன் இணைந்து அவரது மகன் ஈஸ்வரன் மருமகள் சோனாலி ஆகியோர் தங்கள் நிலத்தில் தக்காளி  பயிரிட்டுள்ளனர்.

சமீபத்தில் தக்காளி விலை அதிகரித்த  நிலையில்,, இவர்கள் ஒரு தக்காளி பெட்டி சராசரியாக ரூ.1000 முதல் ரூ.2400 வரை வருமானம் ஈட்டியுள்ளனர். இதன் மூலம் ஒரே மாதத்தில் மட்டும் ரூ.1.40 கோடி வருமானம் ஈட்டியுள்ளார்.

இதேபோல், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி ஒருவர்  ரூ38 லட்சம் வருமானம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது,