அயோத்தியில் நாளை 9 லட்சம் விளக்குகள்: உலக சாதனைக்கு ஏற்பாடு
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முந்தைய நாள் தீப ஒளி உற்சவம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நாளை தீப ஒளி உற்சவம் கொண்டாடப்பட உள்ளது
குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தியில் இந்த ஆண்டு தீப உற்சவத்தையொட்டி உலக சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாளை மாலை ஒரே நேரத்தில் 9 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு உள்ளதாகவும் இது ஒரு உலக சாதனையாக கருதப்படும் என்றும் கூறப்படுகிறது
இதற்கான விரிவான ஏற்பாடுகளை அயோத்தியில் உள்ள ராமர் கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர் என்பதும் நாளை அயோத்தி முழுவதும் 9 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு ஜெகஜோதியாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது