செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By

கிணற்றில் விழுந்த குழந்தை… வேடிக்கைப் பார்த்த 8 பேர் மரணம்!

மத்தியப் பிரதேசத்தில் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி நடந்த போது அதை வேடிக்கப்பார்த்த மக்கள் கிணற்றில் விழுந்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் நேற்று முன்தினம் சிறுமி ஒருவர் 50 அடி ஆழம் உள்ள கிணற்றில் விழுந்துள்ளார். அதனால் அப்பகுதி மக்கள் அந்த கிணற்றில் இருந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  அதையடுத்து கிணற்றை சுற்றி மக்கள் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். இதனால் கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து 30 பேர் கிணற்றுக்குள் விழுந்துள்ளனர்.

இதையடுத்து பதற்றம் அதிகமாக போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு மீட்புப் பணிகள் துரிதமாக செய்யப்பட்டன. இதில் 8 பேர் பலியாக, மற்றவர்கள் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர்.