செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 13 ஆகஸ்ட் 2022 (08:41 IST)

75வது சுதந்திர தினவிழா; சிவன் கோவிலில் தேசிய கொடி!

Kalahasthi Temple
இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் பிரபலமான சிவன் கோவில் கோபுரத்தில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் 75வது சுதந்திரதின விழா ஆகஸ்டு 15ம் தேதியன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மத்திய, மாநில அரசுகளும், பொதுமக்களும் தயாராகி வருகின்றனர். நாடு முழுவதும் தேசியக் கொடி விற்பனை ஜரூராக நடந்து வருகிறது.

இந்நிலையில் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக ஆந்திராவில் உள்ள பிரபலமான சிவன் கோவிலான ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் தேசியக்கொடி தொங்கவிடப்பட்டுள்ளது. சுமார் 60 அடி உயரத்திற்கு கோபுரத்தின் மீதிருந்து தேசியக் கொடி தொங்க விடப்பட்டுள்ளது. ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் தேசியக்கொடி தொங்கவிடப்படுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.