1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (18:19 IST)

சட்டவிரோத கடன் வழங்கும் 600 செயலிகள் கண்டுபிடிப்பு: ரிசர்வ் வங்கி

loan
சட்டவிரோதமாக கடன் வழங்கும் 600 செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 27 செயலிகள் முடப்பட்டு உள்ளதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது 
 
மற்ற செயலிகளையும் முடக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது 
 
சட்டவிரோதமாக கடன் வழங்கும் சலுகைகள் குறித்து 2500-க்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் 500க்கும் மேற்பட்ட புகார்கள் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து மட்டுமே பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது 
 
இந்தியாவில் உள்ள அனைத்து சட்ட விரோதமாக கடன் கொடுக்கும் செயலிகளும் இன்னும் ஒரு சில மாதங்களில் முடக்கப்படும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி உறுதி அளித்துள்ளது