வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 24 ஜூலை 2020 (07:20 IST)

வெளிநாட்டு இந்தியர்களை மீட்க உதவிய ஏர்-இந்தியா விமானிகள் 60 பேருக்கு கொரோனா

வெளிநாட்டு இந்தியர்களை தாயகம் அழைத்து வர பணிபுரிந்த ஏர் இந்தியா விமானிகள் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இதுகுறித்து ஏர் இந்தியா விமானிகள் குழு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி அவர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்று காரணமாக வெளி நாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய அரசு வந்தே பாரத்திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டத்தின் நூற்றுக்கணக்கான நாடுகளில் இருந்து சுமார் ஐந்து லட்சம் இந்தியர்கள் ஏர் இந்தியா விமானத்தின் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
 
இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வரும் பணியில் ஈடுபட்ட ஏர்-இந்தியா ஊழியர்களில் 60 உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது