வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 3 டிசம்பர் 2023 (12:46 IST)

4 மாநில தேர்தல் முடிவில் காங்கிரஸ் பின்னடைவு! அடுத்து என்ன? – டெல்லியில் கூடும் I.N.D.I.A முக்கியஸ்தர்கள் கூட்டம்!

நடைபெற்று முடிந்த 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் பெரும்பாலான இடங்களில் தோல்வியை சந்தித்துள்ள நிலையில் டெல்லியில் I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது.



மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல்கள் நடைபெற்ற நிலையில் இன்று மிசோரம் தவிர்த்து மீத 4 மாநிலங்களுக்கான தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தெலுங்கானாவில் ஆளும் சந்திரசேகர் ராவின் கட்சியை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் பெரும்பான்மை ஆட்சி அமைக்க உள்ளது. ஆனால் ராஜஸ்தானில் இருந்த தனது ஆட்சியை இழக்கிறது காங்கிரஸ். அங்கே பாஜக பெரும்பான்மை பெற்று வருகிறது.

சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. நாளை மிசோரம் மாநில தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. தற்போது வரை 4 மாநிலங்களில் ஒன்றில் மட்டுமே காங்கிரஸ் வென்றுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே தலைமையில் டிசம்பர் 6ம் தேதி அவரது வீட்டில் I.N.D.I.A கூட்டணி கட்சி பிரதிநிதிகளுடன் ஆன சந்திப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கூட்டணி கட்சிகளுக்கு மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கூட்டத்தில் மாநில தேர்தல்களில் தோல்விக்கான காரணம் குறித்தும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K