செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 28 ஜூலை 2024 (08:09 IST)

டெல்லியில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் திடீர் வெள்ளம்: மூன்று மாணவர்கள் பரிதாப பலி..!

டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் திடீரென வெள்ளம் புகுந்த நிலையில் அந்த பயிற்சி மையத்தில் பயின்று கொண்டிருந்த 2 மாணவிகள், ஒரு மாணவர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக டெல்லியில் வரலாறு காணாத மழை பெய்து வரும் நிலையில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுவதாகவும் மீட்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக டெல்லி ராஜேந்திர நகர் பகுதியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் திடீரென வெள்ள நீர் புகுந்ததாகவும் இதனால் மாணவர்கள் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் சிக்கிக்கொண்ட மூன்று மாணவர்கள் வெளியே வர முடியாமல் இருந்த நிலையில் அவர்கள் உயிரிழந்ததாகவும் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன

பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் வெள்ள நீரில் சிக்கிய இரண்டு மாணவியர் மற்றும் ஒரு மாணவியர் உடல் மீட்கப்பட்டதாகவும் இந்த நிலையில் தண்ணீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

Edited by Siva