1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : திங்கள், 25 மே 2020 (18:52 IST)

நாளை முதல் 3,500 பேருந்துகள் இயக்கப்படும்...

கர்நாடக மாநிலம் பெங்களூரில் நாளை முதல் 3,500 பேருந்துகள் இயக்கப்படும் என  மாநக போக்குவரத்து கார்ப்பரேசன் கூறியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது  கட்ட ஊரடங்கும் முடிவடைந்து நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 4,021 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 57,721 ஆக உயர்ந்துள்ளது.


இந்நிலையில், கர்நாடகாவில் இன்று  மேலும் 93 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இன்று மட்டும் கொரோனாவுக்கு இருவர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகா கொரோனாவுக்கு தற்போது 1,431 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 14 ஆம்தேதி மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிந்த நிலையில், அம்மாநிலத்தில் பொது போக்குவரத்தைத் தொடங்க மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி அளித்தது.

ஒவ்வொரு மாநிலமும் வழிகாட்டு நெறிமுறைகளின் படி போக்குவரத்தைத் தொடங்கின. அதிகபட்சமாக  20 பேர் பயணம் செய்ய அனுமதித்தது. எனவே நாளை முதல் 3500 பேருந்துகள் இயக்கப்படும் என்று பெங்களூரு மாநகர போக்குவரத்து  கார்பரேசப் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 30 பேர் வரை பயணிக்க வரை அனுமதி வழங்கியுள்ளது.
*