வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (11:18 IST)

இந்தியாவில் 175 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை!

இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடி என்ற நிலையில் 175 கோடி தடுப்பூசியை செலுத்தப்பட்டு சாதனை செய்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
கொரோன வைரஸ் தடுப்பு பணிக்காக கடந்த சில மாதங்களாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் நூறுகோடி தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது 175 கோடி தடுப்பூசிக்கு மேலாக செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது இதில் பலர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மண்டவிய அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் இந்தியாதான் என்றும் இந்தியா தடுப்பூசி செலுத்துதலில் சாதனை செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்