திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 26 நவம்பர் 2022 (00:16 IST)

மாநிலங்களுக்கு விடுவிக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகை ரூ.17,000 கோடி விடுவிப்பு

மாநிலங்களுக்கு விடுவிக்க வேண்டிய ஜிஎஸ்டி   நிலுவைத் தொகையாக ரூ.17000 கோடியை விடுவித்துள்ளது மத்திய அரசு.

மாநிலங்களுக்கு விடுவிக்க வேண்டிய ஜிஎஸ்டி  நிலுவைத் தொகையை விரைவில் விடுவிக்க வேண்டுமென மாநில முதல்வர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், பிரதமர் மோடியின் தலைமையிலான அரசி இன்று ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதத்திற்காக ஜிஎஸ்டி   நிலுவைத் தொகையாக ரூ.17000 கோடியை விடுவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரியிலான  3 மாதங்களில் தமிழகத்திற்கு ரூ.1188 கோடியும், மகாராஷ்டிர மாநிலத்திற்கு ரூ.2081 கோடியும், கர்நாடகாவிற்கு ரூ.1915 கோடியும்,  டெல்லிக்கு ரூ.1200 கோடியும்,    உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரூ.1202 கோடியும் விடுவித்துள்ளது.

20220-2023 ஆம்  நிதியாண்டில் மாநிலங்களுக்கு  என மத்திய அரசு ஜிஎஸ்டி நிலுவைத் தொகையாக ரூ.1,15,662 கோடி விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj