திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 29 ஜனவரி 2017 (13:25 IST)

பாம்பாக மாறி வரும் 16 வயது சிறுமி: கொடிய நோயின் பாதிப்பு!!

அரிய வகை நோயால் பாம்பாக மாறி வரும் 16 வயது சிறுமி ஒருவர், இந்த நோய்க்கான உரிய தீர்வின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.


 
 
இந்தியாவைச் சேர்ந்த ஷாலினி யாதவ், எரித்ரோடெர்மா என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் தோல் சிவப்பாக மாறி, பின்னர் வறண்டு போய் விடுகிறது. 
 
இதனை சமாளிக்க 3 மணி நேரத்திற்கு ஒரு முறை உடலை தண்ணீரில் நனைக்க வேண்டும். தொடர்ந்து உடலை இவ்வாறு ஈரப்பதமாக வைத்துக் கொள்வதன் மூலம், அதிகம் வறண்டு போகாமல் தவிர்க்க முடியும்.
 
இந்த பாதிப்பு காரணமாக, சிறுமியின் உடல் பாம்பின் உடல் அமைப்பு போல் காட்சியளிக்கிறது. இந்த கொடிய நோயின் தாக்கத்தை குறைப்பதற்கு, போதிய பணம் இல்லை என்றும், உதவியை நாடி காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.