புதன், 26 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 28 ஜூன் 2016 (09:17 IST)

பையனை பலாத்காரம் செய்ய முயன்ற பொண்ணு: படுகாயம் அடைந்த சிறுவன்

நாடெங்கிலும் பாலியல் பலாத்காரம் என பல நிகழ்வுகள் தினமும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. இவர்களின் கண்களுக்கு அது சிறுமியோ, என்ன உறவோ எதுவும் தெரியாது. இப்படி பல நிகழ்வுகளை நாம் செய்திகள் வாயிலாக கேள்விப்பட்டிருப்போம்.


 
 
வழக்கமாக ஆண் தான் பெண்ணை பலாத்காரம் செய்தான் என பலமுறை படித்திருப்போம். ஆனால் உத்தரபிரேதச மாநிலம் லக்னோ அருகே உள்ள குலஹூலி கிராமத்தில் 10 வயது சிறுவனை 16 வயது பொண் ஒருவர் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் நடந்துள்ளது.
 
10 வயது சிறுவனை அந்த 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியுள்ளார். இதில் அந்த சிறுவன் படுகாயம் அடைந்துள்ளான். இதனையடுத்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் இருவரும் சிறார்களாக இருப்பதால் இந்த வழக்கு கடினமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் பிரிவு 8-இன் கீழ் பாலியல் குற்ற வழக்கு பதிவு செய்யலாம் எனவும் கூறப்படுகிறது.