ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (10:20 IST)

வருமான வரித்தாக்கல் – புதிய அறிவிப்பு !

ஏபரல் 1 ஆம் தேதிக்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் வருமான வரித்தாக்கலுக்கு கட்டாயம் ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

இந்திய அரசு அளித்துள்ள ஆதார் எண்ணை வங்கிக் கணக்குகள் மற்றும் சிம் கார்டு வாங்குதல் போன்ற அனைத்தோடும் இணைக்கவேண்டும் என வலியுறுத்தி வருகிறது. ஆனால் இது சம்மந்தமான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் வருமான வரித்தாக்கல் செய்யும் போது பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை சார்பில் அறிவித்துள்ளது.

இதற்கான இறுதி தேதியாக மார்ச் 31 ஆம் தேதியை அறிவித்தது. அப்படி இணைக்காத பட்சத்தில் ஆதார் எண் செல்லததாகி விடும் என செய்திகள் வெளியாகி அதிர்ச்சியளித்தன. ஆனால் மத்திய அரசு ஆதாரை பான் கார்டை இணைக்க செப்டம்பர் 30 ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் வருமான வரித்தாக்கல் செய்வோர் இனி ஆதார் எண்ணையும் அந்தந்த விண்ணப்பங்களில் கட்டாயம் குறிப்பிடவேண்டும் என தெரிவித்துள்ளனர். அதேசமயம், விதி விலக்கு அளிக்கப்பட்ட வருமான வரி கணக்குகளுக்கு ஆதார் எண்ணைக் குறிப்பிட அவசியமில்லை என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.