புதன், 27 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By siva
Last Updated : புதன், 13 ஜனவரி 2021 (07:53 IST)

விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் எப்படி? டுவிட்டர் விமர்சனங்கள்

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ இன்று அதிகாலை இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் படத்தை பார்த்த டிவிட்டர் பயனாளிகள் கூறும் ரிசல்ட் என்னவென்று பார்ப்போம் 
 
‘மாஸ்டர்’ திரைப்படம் 100% லோகேஷ் கனகராஜ் படம் என்று நம்பி போக வேண்டாம். விஜய் வழக்கம்போல் ஜேடி என்ற கேரக்டரில் கலக்கியுள்ளார். விஜய் சேதுபதி கேரக்டர் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஒளிப்பதிவு மிக அருமை. அருமையான விஜய்யின் அறிமுகம் படத்தை நிமிர வைக்கிறது
 
ஆனால் அதே நேரத்தில் கல்லூரி காட்சிகள் மிகவும் ஸ்லோவாக இருக்கிறது. இன்டர்வல் பிளாக் கச்சிதமாக இருந்தாலும் படத்தின் நீளம் ஒரு மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட் என்று ட்விட்டர் பயணி ஒருவர் கூறியுள்ளார் 
 
ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருப்பதாகவும் லோகேஷ் கனகராஜின் வழக்கமான திரைக்கதை மேஜிக்கை மிஸ் செய்வதாகவும் மிக நீளமான படம் இருப்பதாகவும் சிலர் குறை கூறியுள்ளனர். மாநகரம், கைதி ஆகிய படங்களுக்கு பிறகு லோகேஷ் கனகராஜின் மிகச் சிறந்த ஆக்ஷன் படம் என்று டுவிட்டர் பயனாளி ஒருவர் குறிப்பிட்டுள்ளார், மொத்தத்தில் ‘மாஸ்டர்’ திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆக்சன் விருந்தாகவும், நடுநிலை ரசிகர்களுக்கு சுமாரான படமாகவும் இருக்கும் என்று எதிலும் என்று கூறப்படுகிறது