வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Modified: வியாழன், 27 செப்டம்பர் 2018 (15:30 IST)

செக்க சிவந்த வானம் ; ரசிகர்களுக்கு விருந்து : மணிரத்னம் இஸ் பேக்

இயக்குனர்  மணிரத்னம் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள செக்க சிவந்த வானம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

 
நடிகர்கள் விஜய் சேதுபதி, அரவிந்த்சுவாமி, சிம்பு, அருண் விஜய் என மல்டி ஸ்டார்களை கொண்டு மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் இன்று வெளியாகியுள்ளது. இன்று காலை முதலே சிம்புவின் ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர். பல திரையரங்குகளில் அதிகாலை 5 மணி காட்சிக்கு சிம்புவின் ரசிகர்கள் முண்டியத்து, ஆர்வத்துடன் படம் பார்த்தனர்.
 
தியேட்டரிலிருந்து வெளியே வரும் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர். அனைத்து நடிகர்கள் நன்றாக நடித்துள்ளனர். குறிப்பாக சிம்பு மற்றும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரங்களும், நடிப்பும் அருமையாக இருக்கிறது. பக்கா ஆக்‌ஷன் படம். நீண்ட வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் எல்லோருக்கும் பிடித்த மாதிரி ஒரு படம் கொடுத்துள்ளார். மணிரத்னம் இஸ் பேக் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 
இதுபோல், பல நடிகர்களை வைத்து எடுக்கப்படம் திரைப்படத்தில் அனைவருக்கு சமமான வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதை ஹேண்டில் செய்வது மணிரத்தனத்துக்கு கை வந்த கலை. திருடா, திருடா, அக்னி நட்சத்திரம், தளபதி, ஆயுத எழுத்து போன்ற படங்களில் இதை அவர் ஏற்கனவே நிரூபித்துள்ளார்.
 
அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்கு பிறகு வந்த மணிரத்தினத்தின் படங்கள் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை. அதை செக்க சிவந்த வானம் படத்தில் மணிரத்னம் சரி செய்துள்ளார். முதல் பாதி விறுவிறுவென செல்கிறது. முதல் பாகத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு பிரமாதம். இரண்டாம் பாகத்தில் சற்று தொய்வு ஏற்பட்டாலும் கிளைமேக்ஸ் சிறப்பாக இருக்கிறது என சமூக வலைத்தளங்களில் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
 
செக்க சிவந்த வானம்... ரசிகர்களுக்கு விருந்து... .மணிரத்னம் இஸ் பேக்.....