தனுஷுடன் மீண்டும் ஜோடி சேரும் ஹன்சிகா: எந்த படத்தில் தெரியுமா?
தமிழ் திரையுலகில் தற்போது பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் ஹீரோ என்றால் அந்தப் பட்டியலின் தனுஷ் பெயர் கண்டிப்பாக இருக்கும். தனுஷ் நடித்து முடித்த ’ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஏற்கனவே ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அதுமட்டுமின்றி கார்த்திக் நரேன் இயக்கும் திரைப்படம், வெற்றிமாறன் இயக்கும் திரைப்படம், தனுஷே இயக்கும் திரைப்படம் என ஒரே நேரத்தில் ஆறு திரைப்படங்களில் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளிவந்தது. இந்த படத்தில் நாயகியாக நடிக்க ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே தனுஷ் நடித்த ’மாப்பிள்ளை’ என்ற படத்தில் ஹன்சிகா நடித்து உள்ள நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் அவருடன் ஜோடி சேருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது