ஆள் அடையாளமின்றி மாறிப்போன சிட்டிசன் பட நடிகை! பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க!

Last Modified திங்கள், 29 ஏப்ரல் 2019 (11:32 IST)
சினிமாவில் ஒருகாலகட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்து உச்சத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகள் திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு முடுக்கு போட்டுவிட்டு ஆள் அடையாளமின்றி மாறிவிடுகிறார்கள். 


 
அப்படித்தான் தமிழ் சினிமாவில் கமல் நடித்த ஹே ராம் படத்தின் மூலம் அறிமுகமானவர் வசுந்தரா தாஸ். அதன் பிறகு அஜித்துடன் சிட்டிசன் படத்தில் நடித்து பிரபலமானார். பின்  ஏராளமான இந்தி, மலையாளப் படங்களில் நடித்துள்ளார். இவர் அடிப்படையில் ஒரு பாடகி. தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கும் வசுந்தரா, பெங்ளூரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.


 
ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்த இவரால் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை. இதனால் இந்தி , தெலுங்கு பல மொழி படங்களில் நடிக்கத் நடித்திருந்தும் பயனளிக்கவில்லை. இதனால் சினிமாவுக்கு முடுக்கு போட்டுவிட்டு ரோபர்ட் நரேன் என்ற ட்ரம்ஸ் கலைஞரை திருமணம் செய்துகொண்டு பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார். 


 
இந்நிலையில் தற்போது இவர் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது அதில்  படு குண்டாக மாறி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கும் வசுந்தராவை  பார்த்தவர்கள் ஷாக் ஆகிவிட்டனர்.


இதில் மேலும் படிக்கவும் :