திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : வியாழன், 15 பிப்ரவரி 2024 (12:04 IST)

பங்குச்சந்தை இரண்டாவது நாளாக ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!

share
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் நேற்று முன் தினம் படு மோசமாக இறங்கியது என்பதை பார்த்தோம். ஆனால் நேற்று பங்குச்சந்தை ஓரளவு உயர்ந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 
 
மும்பை பங்குச் சந்தை 25 புள்ளிகள் உயர்ந்து 71,839 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதை போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 22 புள்ளிகள் உயர்ந்து 21, 862 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
நேற்றும் இன்றும் பங்குச்சந்தை ஓரளவு உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ள நிலையில் வரும் நாட்களில் அதிகமாக பங்கு சந்தை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இன்றைய பங்குச்சந்தையில் பேங்க் பீஸ், கோல்ட் பீஸ், ஐடி பீஸ், கரூர் வைசியா வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஏபிசி கேப்பிடல், சிப்லா, ஐடிசி ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
 
 
Edited by Siva