தொடர் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு குஷி..!
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக தொடர் ஏற்றத்தில் இருந்து வருவதை அடுத்து முதலீட்டாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் தொடர்ச்சியாக பங்கு சந்தை உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இன்றும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சற்றுமுன் 179 புள்ளிகள் உயர்ந்து 72365 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச் சந்தை அனுப்பி 65 புள்ளிகள் உயர்ந்து 21 ஆயிரத்து 995 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தொடர்ச்சியாக பங்குச்சந்தை உயர்ந்து வருவதை அடுத்து முதலீடு செய்தவர்களுக்கு அதிக லாபம் கிடைத்து வருவதாகவும் இன்னும் பங்குச்சந்தை உச்சத்திற்கு செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Edited by Siva