பெரிய அளவில் ஏற்ற இறக்கமின்றி பங்குச்சந்தை: இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
பங்குச்சந்தை நேற்று பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இன்றி இருந்த நிலையில் இன்றும் அதே போல் தான் வர்த்தகமாகி வருகிறது.
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 25 புள்ளிகள் மற்றும் குறைந்து 64 ஆயிரத்து 950 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை ஆன நிப்டி பத்து புள்ளிகள் மட்டும் குறைந்து 19,432 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. தீபாவளி வரை பங்கு சந்தை பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இருக்காது என்றும் அதன் பிறகு தான் ஏற்ற இறக்கம் தொடங்கும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் அமைத்துள்ள.
இருப்பினும் புதிதாக பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் தகுந்த ஆலோசனை பெற்று சரியான நேரத்தில் முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
Edited by Siva