ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (09:28 IST)

ஹிண்டன்பர்க் அறிக்கையால் பெரிய பாதிப்பு இல்லை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

share
அதானி நிறுவனம் மீதும், செபி தலைவர் மீதும் ஹிண்டன்பெர்க்  அறிக்கை கூறிய குற்றச்சாட்டு காரணமாக இன்று பங்குச்சந்தை படு வீழ்ச்சி அடையும் என்று எதிர்பார்த்த நிலையில் பெரிய அளவில் பங்குச்சந்தை குறையவில்லை என்பது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அழைத்துள்ளது.

இந்திய பங்குச்சந்தை சற்றுமுன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 220 புள்ளிகள் மட்டுமே குறைந்து 79 ஆயிரத்து 475 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 70 புள்ளிகள் மட்டுமே குறைந்து 24 ஆயிரத்து 298 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

ஹிண்டன்பெர்க்  அறிக்கை காரணமாக 1000 புள்ளிகளுக்கும் மேல் சென்செக்ஸ் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில் பெரிய அளவில் குறைவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் பங்குச்சந்தை முடியும் போது தான் அதன் உண்மை நிலை என்ன என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பங்குச் சந்தையில் டாட்டா மோட்டார்ஸ், சிப்லா, கோல்ட் பீஸ் ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஏபிசி கேப்பிட்டல், ஐடிசி, கல்யாண் ஜுவல்லர்ஸ், கரூர் வைஸ்யா வங்கி உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.


Edited by Siva