700 புள்ளிகள் சரிந்தது சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இந்த வாரத்தில் இரண்டு நாட்கள் பங்குச்சந்தை உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் இன்று திடீரென பங்குச்சந்தை சுமார் 700 புள்ளிகள் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சற்றுமுன் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 650 புள்ளிகள் சரிந்து 59 ஆயிரத்து 150 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
அதேபோல் தேசிய பங்கு சந்தை லிப்ட் 170 புள்ளிகள் சார்ந்து 17,420 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை மேலும் குறைய வாய்ப்பிருப்பதாகவும் புதிதாக முதலீடு செய்பவர்கள் பொறுமை காக்கவும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
Edited by Siva