1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Mahendran
Last Updated : சனி, 30 செப்டம்பர் 2023 (10:27 IST)

மீண்டும் ரூ.43000க்குள் வந்த தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.240 சரிவு..!

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 240 ரூபாய் தங்கம் விலை குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 5360.00 என்றும்  ஒரு சவரன் 42880.00 என்றும் விற்பனையாகி வருகிறது. நேற்று தங்கம் சென்னையில் ஒரு சவரன் 43120.00 என விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் 24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் 5830.00 என்றும் எட்டு கிராம் 46640.00 என்றும் விற்பனையாகி வருகிறது. தங்கம் போலவே வெள்ளியின் விலையும் இன்று சென்னையில் குறைந்துள்ளது. 
 
நேற்று ஒரு கிராம் 77.50 ரூபாய் என்றும் ஒரு கிலோ 77,500  என்றும் விற்பனையான நிலையில் இன்று ஒரு கிலோ 1500 ரூபாய் குறைந்து 76000.00 என விற்பனை ஆகி வருகிறது. 
 
தங்கம் விலை குறைந்து கொண்டே வருவதால் வாங்குவதற்கு சரியான நேரம் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran