பங்குச்சந்தையின் இன்றைய நிலவரம் என்ன? நிஃப்டி, சென்செக்ஸ் அப்டேட்..!
பங்குச்சந்தை கடந்த வாரம் முழுவதும் படுமோசமாக சரிந்த நிலையில், இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று பங்குச்சந்தை ஓரளவு உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை பெற்றனர்.
ஆனால் இன்று இரண்டாவது நாளில் மீண்டும் பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம் தொடங்கி இருப்பதை கண்டு, முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் தற்போது 5 புள்ளிகள் சரிந்து, 78,548 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 10 புள்ளிகள் உயர்ந்து, 23,762 என விற்பனையாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தை பெரிய அளவில் ஏற்ற இறக்கமின்றி கிட்டத்தட்ட நேற்றைய முடிவில் தான் வர்த்தகமாகி வருவதால், இன்று பங்குச்சந்தையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்.சி.எல். டெக்னாலஜி, இன்ஃபோசிஸ், மாருதி, நெஸ்ட்லே உள்ளிட்ட பங்குகள் உயர்ந்ததாகவும், பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ பேங்க், ஐ.டி.சி உள்ளிட்ட பங்குகள் சரிந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
Edited by Siva