சென்செக்ஸ் 720 புள்ளிகள் உயர்வு: நல்லபடியாய் துவங்கிய வர்த்தகம்!
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 720 புள்ளிகள் உயர்ந்து 57,980 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
கடந்த திங்கட்கிழமை மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 1200க்கும் அதிகமான புள்ளிகள் இறங்கியதால் முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல கடந்த வாரத்தில் இரண்டாவது நாளாக சென்செக்ஸ் 1400 வரை சரிந்தது.
இந்நிலையில் இன்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 720 புள்ளிகள் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 720 புள்ளிகள் உயர்ந்து 57,980 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 213 புள்ளிகள் குறைந்து 17,267 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.