4ஆம் வகுப்பு மாணவனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த ஆசிரியர்: அதிர்ச்சி சம்பவம்
கர்நாடக மாநிலத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த ஆசிரியரை அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹதாலி என்ற பகுதியில் அரசு பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு மாணவர் ஒருவர் படித்து வந்தார். இந்த நிலையில் அந்த மாணவரை ஆசிரியர் மண்வெட்டியால் தாக்கி முதல் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது
இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது மாணவியை கொலை செய்த ஆசிரியரின் பெயர் முத்தப்பா என்றும் கூறப்படுகிறது. இந்த மாணவரின் தாய் அதே பள்ளியில் படித்து வந்த நிலையில் மாணவனின் தாய் அந்த ஆசிரியரை எவ்வளவு தடுக்க முயன்ற போதும் அவரையும் தாக்கியுள்ளதாக தெரிகிறது
பள்ளி மாணவனை ஆசிரியர் எதற்காக கொலை செய்தார் என்ற காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் மாணவனை கொலை செய்த உடன் ஆசிரியர் தலைமறைவாகி உள்ளதாகவும் அவரை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது .
தனது வகுப்பில் படிக்கும் மாணவர் கொடூரமாக கொலை செய்த ஆசிரியரால் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
Edited by Siva