ஒரே நாளில் ரூ. 536 விலை குறைந்த தங்கம் – மக்கள் நிம்மதி பெருமூச்சு!
நேற்று ஒரே நாளில் கிடுகிடுவென விலை உயர்ந்த தங்கம் இன்று சடாரென விலை சரிந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்றமும் இறக்கமுமாய் ஆட்டம் காட்டி வருகிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையாலும், பலர் தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்ய தொடங்கியதாலும் தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ரூ.30,000-த்திற்குள் இருந்த நிலையில் நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.538 உயர்ந்து ரூ.31,432க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை ஒரே நாளில் விலை ஏறியது பொது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 536 ரூபாய் விலைகுறைந்து 30,640 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை உயர்வால் அதிர்ச்சியில் இருந்த மக்கள் விலை குறைந்துள்ளதால் நிம்மதியடைந்துள்ளனர்.