வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By
Last Modified: செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (13:36 IST)

தங்கத்தின் விலை 6 நாட்களில் ரூ.960 குறைந்தது – மக்கள் மகிழ்ச்சி

தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த நிலையில் கடந்த சில தினங்களாக விலை வீழ்ச்சியடைந்து வருவது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் முதலாகவே தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை தொட்டது. உலக பொருளாதார மாற்றங்கள் தங்கம் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தின. கிட்டத்தட்ட 30 ஆயிரம் ரூபாய் வரை உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை தற்போது சில நாட்களாக விலை குறைந்து வருகிறது.

அதன்படி நேற்று சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து 2,278 ரூபாய்க்கு விற்ற தங்கம் இன்று சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து 29,160 ஆக உள்ளது. கடந்த 6 நாட்களில் 960 ரூபாய் வரை தங்கத்தின் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 14ரூபாய் குறைந்து 3,645 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. திருமணத்துக்கு நகை வாங்க முடியாமல் அவதிப்பட்ட மக்களுக்கு இந்த செய்தி சற்று ஆறுதலானதாக இருக்கிறது.